Nizhalai Naanum Thodarave
ஒரு வார்த்தை பேசு என் கண்ணே
நீ என்னை நீங்கிச் செல்லாதே
ஒரு வார்த்தை பேசு என் கண்ணே
நீ என்னை நீங்கிச் செல்லாதே
நிழலாய் நானும் தொடரவே
கனவாய் நீயும் கலைகிறாய்
வலிகள் தாங்கிடும்
நெஞ்சம்
உன். பிரிவை தாங்கக் கூடுமோ
நிழலாய் நானும் தொடரவே
கனவாய் நீயும் கலைகிறாய்
உயிரைப். பிரிகின்ற
வலியினை
என் இதயம் இன்று உணருதே
மேகங்கள் இல்லாமல்
தீருமா தாகம்
ராகங்கள் இல்லாமல்
சேருமா தாளம்
நீயின்றி எந்நாளும்
மாறுமா காயம்
நீதானே என்வாழ்வின்
பௌர்ணமி காலம்
சாரல்கள் வாராமலே
சோலைகள் மலராதே
கோபங்கள் தீராமல்
கூடல்கள் ஆகாதே
காயங்கள் ஆறாதோ
கண்ணே நம் மனம் பேச
வார்த்தை இல்லா அடி
மொழியே இல்லை
தர்க்கம் இல்லா
ஓர் இணையும் இல்லை
நேற்று வரை
உன் உயிராய் நானே
இன்று ஏனோ
உன் பாரமாய் ஆனேன்
விடியலை கானா
வானமும்
இங்கு இருந்திட இருந்திட
நியாயமோ
கரைதனை தீண்டா
அலைகளும்
இங்கு இருந்திட இருந்திட
கூடுமோ
இமைகளை மூடிடும்
நொடியிலும்
உனை பிரிந்திட பிரிந்திட
கூடுமோ
கனவுகள் ஆயிரம்
கண்டதும்
அது கலைந்திட நெஞ்சமும்
தாங்குமோ
ஒரு வார்த்தை பேசு என் கண்ணே.
உனை விட்டு நானும் போவேனோ
நீதானே இன்றும் என் உயிரே
நீயின்றி நானும் வாழ்வேனோ